பாஜக பயங்கரவாதிகளின் கட்சி.. நகர்ப்புற நக்சல் என விமர்சித்த மோடிக்கு கார்கே பதிலடி
- தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்
- பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, குற்றவாளிகளை ஆதரிப்பது உள்ளிட்வற்றை செய்து வருகிறார்கள்.
பாஜக பயங்கரவாதிகளின் கட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நகர்ப்புற நக்ஸலைட்டுகளால் நடத்தப்படும் கட்சி என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கார்கே பேசியதாவது, முற்போக்கு சிந்தனை உள்ளவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைப்பது மோடியின் வழக்கமாக உள்ளது. ஆனால் பாஜகவே ஒரு பயங்கரவாத கட்சிதான்.
தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, இந்த குற்றவாளிகளைஆதரிப்பது என செயல்படும் அவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சொல்ல மோடிக்கு எந்த வகையான உரிமையும் கிடையாது.
பாஜகவின் அரசு உள்ள இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு குறிப்பாக பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்து வருகிறது. ஆனால் வன்முறைக்கு எதிராக உபதேசம் மட்டும் செய்கிறார்களே ஒழிய கட்சியில் உள்ள அத்தகையோர்களை கட்டுப்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார்.