இந்தியா

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Published On 2023-07-04 19:11 GMT   |   Update On 2023-07-04 19:16 GMT
கார்கள் நசுங்கி சிதறிய வீடியோர் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கி சிதறிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலி மற்றும் 3 பேர் பலத்த காயம் உட்பட பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடம் எப்போதும் "பகலா பஹார்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது.

காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News