இந்தியா
நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர்- அடித்து செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்பு தங்கம்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்
- கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
- நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதில், அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன. இதனால், நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், கடையில் இருந்த சுமார் 2.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.