இந்தியா

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும்" - லட்சத்தீவு விவகாரத்தில் கார்கே கருத்து

Published On 2024-01-09 12:47 GMT   |   Update On 2024-01-09 12:47 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.
  • மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது

இதனை தொடர்ந்து, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மூன்று அதிகாரிகளும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, காங்கிரஸ்  தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News