இந்தியா

விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சாதியையும் கணக்கில் கொள்ள மத்திய அரசு பரிசீலனை

Published On 2024-08-23 06:32 GMT   |   Update On 2024-08-23 06:32 GMT
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் ஆதரவு.
  • மக்களை தொகை கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக் கொள் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள.

இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News