இந்தியா

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Published On 2024-07-16 13:31 GMT   |   Update On 2024-07-16 13:34 GMT
  • மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பாராளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் ஜூலை 21-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Tags:    

Similar News