இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனம் சேர்ப்பு: பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2023-12-07 15:45 GMT   |   Update On 2023-12-07 15:46 GMT
  • குஜராத்தின் பிரபலமான கர்பா நடனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
  • யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.

புதுடெல்லி:

நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

இந்த கர்பா நடனத்தைப் பார்த்து ரசிப்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர். வட மாநிலங்கள் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது.

கர்பா நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கக் கோரி மத்திய அரசு யுனெஸ்கோவுக்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில், பாரம்பரிய கலாசார நிகழ்வுகளைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் சர்வதேச குழுவின் மாநாடு தென் அமெரிக்க நாடான போட்ஸ்வானாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடனத்தைக் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News