இந்தியா
குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை நீடிப்பு: குஜராத் அரசு
- குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- புகையிலை அடிப்படையிலான பொருட்களுக்கு குஜராத் அரசு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்தது.
அகமதாபாத்:
குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குஜராத்தில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்க, விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.
குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை செப்டம்பர் 13-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.