இந்தியா

குஜராத், இமாசலபிரதேசம்: 2 மாநில தேர்தலில் காங்கிரஸ் ரூ.130 கோடி செலவு

Published On 2023-06-08 03:03 GMT   |   Update On 2023-06-08 03:03 GMT
  • குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது.
  • இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது.

புதுடெல்லி :

குஜராத் மாநிலத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.

இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க.விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செலவு செய்த தொகை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது.

அதன்படி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது. அதே நேரத்தில் இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது. ஆக, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.130 கோடி செலவு செய்துள்ளது.

இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ரூ.49 கோடியே 69 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டி உள்ளது.

Tags:    

Similar News