ஆந்திராவில் நாளை முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்
- 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அரை நாள் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
- காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
அமராவதி:
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த மாதம் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். ஏப்ரல் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2-வது சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு பள்ளிகளில் கிராம பஞ்சாயத்துகளின் ஆதரவுடன் போதுமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த வெளியிலோ அல்லது மரத்தடியிலோ வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ள அவர் மதிய உணவுடன் மோர், பால் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.