null
ஹரப்பா இனிமேல் சரஸ்வதி நாகரிகம்.. அம்பேத்கர் குறிப்புகள் நீக்கம்.. NCERT புத்தகத்தால் சர்ச்சை
- வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் குறித்த குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப் பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6 ஆம் வகுப்பு என்சிஆர்டி சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வரலாறு தொடர்பான சில தொடர்களுக்கு புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது .
அந்த வகையில் ஹரப்பா நாகரிகம் என்பதற்கு பதிலாக சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி ஆற்றில் இருந்தே இந்திய நாகரிகம் உருவாகியுள்ளதாக புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய பாடப்புத்தகத்தில் ரிக் வேத காதலத்தில் ஓடிய பல நதிகளில் சரஸ்வதியும் ஒன்று என்று ஒரே ஒரு இடத்தில மட்டுமே குறிப்பிடபட்டிருந்தது. ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு சரஸ்வதி ஆறு வற்றியதே காரணம் என்று புதிய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழைய புத்தகத்தில் ஹராப்பா நாகரிக வீழ்ச்சிக்கான காரணங்களில் சரஸ்வதி ஆறு வற்றியது இடம்பெறவில்லை.
மேலும் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் ஆகியவற்றிற்கு தனித்தனியாக புத்தகங்கள் இருந்த நிலையில் தற்போது அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே புத்தகமாக கொண்டுவந்துள்ளது. பாஜக அரசு 2023 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பின்படி இந்த மாற்றங்கள் செய்யுயப்பட்டுள்ளன. மேலும் சம்ஸ்கிருத வார்த்தைகள் பலவும் புதிய பாடப்புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.
கிரீன்விச் மெரிடியன் உலகின் முதன்மை மெரிடியன் கிடையாது என்றும் அதற்கு முன்னதாகவே பூமியின் மத்திய ரேகை உஜ்ஜையின் வழியாக கடப்பதை கணக்கிட்டு உஜ்ஜைன் மெரிடியன் இருந்து வந்தது என்றும் புதிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பாடத்தில் பல குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்றதளவு குறித்த பாடத்தில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய வரலாற்றுத் திரிபுகள்பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.