இந்தியா (National)

அரியானா சட்டசபை தேர்தல்- இன்றுடன் பிரசாரம் நிறைவு

Published On 2024-10-03 13:56 GMT   |   Update On 2024-10-03 13:56 GMT
  • அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
  • வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.

கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News