இந்தியா (National)

ம.பி., சத்தீஷ்கர் நிலைதான் காங்கிரஸ்க்கு... அரியானா முதல்வர் சொல்கிறார்

Published On 2024-09-30 04:13 GMT   |   Update On 2024-09-30 04:13 GMT
  • காங்கிரஸ் சில நேரங்களில் இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது.
  • சில நேரம் அக்கட்சியின் தலைவர்கள் அபத்தமான அறிக்கையை கொடுக்கின்றனர்.

அரியானாவில் வருகிற 5-ந்தேதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் பா.ஜ.க.-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் அரியானா முதல்வரான நயாப் சிங் சைனி கூறியதாவது:-

கடந்த சில நாட்களில், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ்க்கு ஏற்பட்ட நிலைதான் இங்கேயும் ஏற்படப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 15 முதல் 20 நாட்களாக காங்கிரஸ் தலைவர்கள் அரியாவிற்கு வர ஒத்துக்கொள்ளவில்லை.

தற்போது மாநில மக்கள் விரக்தியில் உள்ளனர். காங்கிரஸ் சில நேரங்களில் இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது. சில நேரம் அக்கட்சியின் தலைவர்கள் அபத்தமான அறிக்கையை கொடுக்கின்றனர். அரியானாவில் காங்கிரஸ் தற்போது குழப்பமாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய திறன் இல்லை.

ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிய ராகுல் காந்தி இரண்டு மூன்று நாள் தேர்தல் பிரசாரத்திற்காக அரியானா வரப்போவதாக திடீரென செய்திகள் பரவுகின்றன. அரியான சிறந்த இடம். கடந்த 10 ஆண்டுகளாக எல்லை நிலைகளிலும் பா.ஜ.க. அரசு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ராகுல் காந்தி இங்கு வந்து சுற்றித்திரிந்து தனது சுற்றுலாவைச் செய்ய வேண்டும். ஹூடா ஆட்சியில் நடைபெற்ற கர்ச்சி பர்ச்சி குறித்து இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். அரியானாவில் உள்ள தலித் மக்கள், ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தபின், எந்முகத்துடன் அரியானாவுக்கு வருகிறீர்கள் என கேள்வி கேட்பார்கள். இதுபோன்ற எல்லாக் கோள்விகளுக்கும் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News