இந்தியா

"அப்பா பத்திரமாக வீட்டுக்கு வாருங்கள்"... ஆந்திர போலீசாரின் இதயத்தை தொடும் விழிப்புணர்வு

Published On 2024-10-29 06:25 GMT   |   Update On 2024-10-29 06:25 GMT
  • அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் புதுமையான விழிப்புணர்வு தொடங்கியுள்ளனர்.

வழக்கமான வேகம் மற்றும் எச்சரிக்கை அறிவுரைகளையும் தாண்டி இந்த மாவட்டத்தில் விபத்துகள் அதிகரித்தது.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களை நினைவுபடுத்தும் வகையில் உணர்ச்சிகரமான வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலை சந்திப்புகள், விபத்து நடைபெறும் இடங்களில் சிறுமி ஒருவர் தனது கையில் வாசகத்துடன் நிற்பது போல பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.

இது வாகன ஓட்டுபவர்கள் இதயத்தை வருடும் வார்த்தைகளாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான தண்டனை, எச்சரிக்கை போன்றவற்றை விட உணர்ச்சிகரமான அணுகுமுறை பொதுமக்களுக்கு விரைவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என போலீஸ் சூப்பிரண்டு பிரதாப் சிவ கிஷோர் தெரிவித்தார்.

Tags:    

Similar News