இந்தியா

கேரளாவில் கனமழை தீவிரம்- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2024-07-13 05:08 GMT   |   Update On 2024-07-13 05:08 GMT
  • முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
  • கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.

திருவனந்தபுரம்:

கேரளாவின் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் இன்று மாநிலத்தில் கனமழை பெய்தது. பத்தனம்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இரவு 9 மணி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (14-ந் தேதி) இரவு 11.30 மணி வரை கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது ராட்சத அலைகள் வீசக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News