உ.பி.யை தொடர்ந்து இமாச்சலபிரதேசத்திலும் உணவக உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்க உத்தரவு
- மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் மற்றும் முகவரிகளை பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இன்று நடைபெற்ற மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங் மற்றும் அனிருத் சிங் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார்.
இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.