ஒரே நாளில் ஐந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா
- டெல்லி- சிகாகோ விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு சோதனை.
- ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டது.
இன்று பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. சோதனைக்குப்பின் அவை அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்கு சென்று ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தமாம் (சவுதி அரேபியா)- லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா- மும்பை ஸ்பைஸ்ஜெட், சிலிகுரி- பெங்களூரு ஆகாசா ஏர் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பயங்கரவாத தடுப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தி வழியாக செல்லும் விமானம் ஆகும். இந்த விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு அங்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன.
இதேபோன்று நேற்று மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவைகளும் புரளி எனத் தெரியவந்தது.