பெட்ரோல், டீசல் விலை: நிதி மந்திரி சொல்வது என்ன?
- மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால்,
- வாட் வரிக்குப் பதிலாக ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து மாநில மற்றும் மத்திய அரசு இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதம் வரும்போது மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்கள் தெரிவிக்கும்.
அதேவேளையில் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறையும் என மத்திய அரசு தெரிவிக்கும்.
இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி வரிக்குள் கொணடு வந்தால் என்ன? என்ற கேள்வியும் எழும்புகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும். அதன்பின் உடனடியாக எங்களால் நடைமுறைப்படுத்தப்படும்.
பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் குறிப்பிடத்தகுந்த வகையில் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வேறுபாடு உள்ளது. இதற்கு மாநிலங்கள் விதிக்கும் மாறுபட்ட வரி விதிப்புதான் காரணம்.
பிரதமர் மோடியின் கூற்றுப்படி "பெட்ரோலியப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மத்திய அரசு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்படும், ஏனெனில் இது தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மிக உயர்ந்த அடுக்கு (Slab) ஆகும்.