இந்தியா

சேலை வாங்கி தராத கணவர்.. காவல்நிலையத்தில் புகார் அளித்த மனைவி

Published On 2024-07-30 14:22 GMT   |   Update On 2024-07-30 14:22 GMT
  • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
  • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News