நானும் முதல்வர் ஆகவே விரும்புகிறேன் - ஆசையை போட்டுடைத்த அஜித் பவார் - எட்டிப் பார்க்கும் பட்னாவிஸ்
- எல்லோரும் அவர்களது தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே விரும்புவர்
- பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறனர்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜவுடன் கூட்டணி வைத்த அவரது அண்ணன் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் உள்ளார். சிவசேனாவை உடைத்து பாஜவுடன் கூட்டணி வைத்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணியிடம் இழந்ததில் இருந்து அஜித் பவார் சிவ சேனா அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியில் சலசப்பான சூழல் நிலவுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக அஜித் பவாரின் பேச்சு அமைந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சராக தான் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக அஜித் பவார் பொதுவெளியில் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புனேவில் உள்ள தாத்துசேத் ஹால்த்வாய் கணபதி கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட பின் பேசிய அவர், எல்லோரும் அவர்களது தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே விரும்புவர் நானும் முதல்வர் ஆகவே விரும்புகிறேன். ஆனால் முதல்வர் ஆக அதிக மெஜாரிட்டியை பெற வேண்டும் என்பதும் அறிவேன். ஆனால் எல்லோரும் நினைப்பது போல் நடப்பதில்லை. தீர்ப்பு வாக்களிக்கும் மக்கள் கையில்தான் உள்ளது. மேலும் அதற்கு மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 145 என்ற பாதி இலக்கையாவது அடைவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாஜகவை சேர்ந்த மகாராஷ்ட்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறனர். எனவே மகாரஷ்டிர முதல்வர் நாற்காலிக்கு கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் குறிவைப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 2 ஆம் வாரத்தில் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.