இந்தியா

சதித்திட்டம் காரணமாக 5 மாதம் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: ஹேமந்த் சோரன்

Published On 2024-06-28 16:13 GMT   |   Update On 2024-06-28 16:13 GMT
  • எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன்.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோடிச வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி கைது செய்தது.

இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து வெளியில் வந்துள்ளார். வெளியில் வந்த அவர் தான் சதியால் பாதிக்கப்பட்டேன் எனத் தெரிவித்தள்ளார். மேலும், நான் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டேன். எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன். ஆனால் நீதித்துறை செயல்முறை நீண்டது.

ஜூன் 13-ந்தேதி நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

தலா 50 ஆயிரம் பிணைத்தொகையுடன் இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய் 55 பக்க ஜாமின் உத்தரவை வழங்கினார்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சாம்பாய் சோரன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை வரவேற்றுள்ளனர்.

முதன்மை பார்வையில் குற்றவாளி அல்ல என்றும், ஜாமினில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்ததாக ஹேமந்த் சோரன் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கட் முக்தி மோட்சா கட்சி தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.

Tags:    

Similar News