இந்தியா

தனது நிலைப்பாட்டில் இருந்து சந்திரபாபு நாயுடு மாறமாட்டார் என்று நம்புகிறேன் - கபில் சிபல்

Published On 2024-06-05 07:48 GMT   |   Update On 2024-06-05 07:59 GMT
  • ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
  • கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

இந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், "நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் எப்போதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு சர்வாதிகார ஆட்சி நடக்க கூடாது என்றும், மாநில அரசுகளின் அனுமதியின்றி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ என்ன செய்தாலும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலைப்பாட்டை எடுத்த அவர்களுக்கு சல்யூட். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தவறமாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News