இந்தியா

தவழ்ந்து வந்தா பென்ஷன் தருவேன்.. மூதாட்டியை சித்ரவதை செய்த 'அரசு' அதிகாரி - வீடியோ

Published On 2024-09-24 11:00 GMT   |   Update On 2024-09-24 11:00 GMT
  • மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.
  • கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒடிசாவில் தந்து பென்ஷன் பணத்தை வாங்க 80 வயது மூதாட்டி நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே செல்ல நேர்ந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் [Keonjhar] பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி [Pathuri Dehury] மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார்.

வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல் இருந்தும் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி, மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

மிகுந்த ஏழ்மையில் வாடும் பதூரி அன்றாட தேவைகளுக்கு பென்ஷன் பணத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துச் செல்ல புறப்பட்டுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி பதூரியால் நடக்க முடியாமல் இருந்த நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு அவர் தவழ்ந்தே சென்று பென்ஷன் பணம் வாங்கியுள்ளார்.

கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதத்திலிருந்து மூதாட்டி பதூரியின் வீட்டுக்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட BDO அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News