இந்தியா

இந்தியாவில் விமானங்களில் இண்டர்நெட்: வியாசட் உடன் இணைந்து இஸ்ரோ நடவடிக்கை

Published On 2024-08-30 06:06 GMT   |   Update On 2024-08-30 06:06 GMT
  • இந்திய வான் எல்லையில் உள்ளூர் விமானங்கள் புறப்பட்டதும் இண்டர்நெட் துண்டிக்கப்படும்.
  • வெளிநாடு விமானங்களில் இந்திய வான் எல்லையில் இண்டர்நெட் துண்டிக்கப்படும் என அறிவிப்படும்.

கிராமத்தில் இருந்து வெகுதூரத்தில் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வசித்து வரும் மக்களை தலைநகரில் உள்ள மக்களுடன் இணைக்கும் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் உலகளவாவிய செயற்கைக்கோள் தொடர்பு நிறுவமானக வியாசட் உள்ளது. இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைகளுக்கு நம்பத்தகுந்த வகையிலான இணையதள தொடர்பை வழங்கி வருகிறது.

இந்திய வான் எல்லையில் பறக்கக்கூடிய விமானத்தில், இணையதள சேவைக்கு மத்திய அரசால் சில வருடங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் லிமிடெ் இண்டர்நெட் இணைப்பு மட்டும்தான். இது விரைவில் மாறப்போகிறது. கலிபோர்னியாவை அடிப்படையாக கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான வியாசட் இந்திய வான் எல்லையில் இண்டர்நெட் இணைப்புகளை கொடுக்க இருக்கிறது.

இஸ்ரோவின் ஒரு பகுதியாக உள்ள பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் ஜிசாட்-20 (GSAT-20) என்ற நவீன செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்து நடவடிக்கைகளும் இந்த வருட இறுதிக்குள் முடிவடைந்தால், இந்த இண்டர்நெட் இணைப்பு விரைவில் சாத்தியமாகும்.

மற்ற செயற்கைக்கோள்களை விட இந்த செயற்கைக்கோளால் அதிக அளவிலான டேட்டாக்களை அனுப்ப முடியும். இது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையத்தை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இண்டர்நெட் வசதி பெற முடியாத நிலையில் வியாசட் மற்றம் இஸ்ரோ அந்த கவலையை விரைவில் நிவர்த்தி செய்யும்.

தற்போது உள்நாட்டு விமானங்களில், விமானங்கள் புறப்பட்டதும் இண்டர்நெட் கிடைக்காது. சர்வதேச விமானங்களில், இந்திய எல்லைக்குள் விமானம் நுழைந்ததும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்படும்.

எட்டாததை அடைவதுதான் வியாசட்டின் மிகப்பெரிய உந்துதல். வியாசட் ஏற்கனவே இந்தயிாவில் பாதுகாப்புத் துறையில் நற்பெயரை பெற்றுள்ளது. தற்போது 1.4 பில்லியன் மக்களை இணைப்பது மிகப்பெரிய வாய்ப்பு என வியாசட் தலைவர் கே. குரு கவுரப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News