இந்தியா

நவம்பர் மாதத்தில் 15.79 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்- தமிழக அரசு வலியுறுத்தல்

Published On 2024-11-06 10:00 GMT   |   Update On 2024-11-06 10:00 GMT
  • தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.
  • தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தல்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடியது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.

அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், நீர் திறக்க உத்தரவிடக் கூடாது என கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Tags:    

Similar News