'ஜெயில் பட்ஜெட்டை உயர்த்துங்கள்.. அடுத்து நீங்களும் போகலாம்'.. ஜெகதீப் தன்கரை அலறவிட்ட சஞ்சய் சிங்
- ஜெகதீப் தங்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது
பாராளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் நேற்று காரசாமான விவாதங்கள் நடந்தன. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், துணை குடையரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மோடி தலைமையிலான பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி அரசு அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பலரை அரசியல் நோக்கத்துடன் சிறையில் அடைத்து வருவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அறிந்ததே.
இந்த நிலையில்தான் மாநிலங்களவையில் நேற்று பேசிய சஞ்சய் சிங், 'நான் பட்ஜெட்டை வாசித்தேன். அதில் சிறைகளுக்கான நிதியும் குறைந்துள்ளது. சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறைகளுக்கான பட்ஜெட்டை மட்டுமாவது உயர்த்துங்கள். படஜெட்டை உயர்த்தி சிறைகளை மேம்படுத்துங்கள். இப்போது என்னை அனுப்பினீர்கள், அடுத்து நீங்களும்[ஜெகதீப் தன்கர்] செல்ல நேரிடும் ' என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், சஞ்சய் சிங்கின் கோரிக்கை குறித்து மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவர் ஜே.பி நட்டா பரிசீலிக்க வேண்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2023 ஆம் ஆனது டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.