இந்தியா

'ரீ நீட்' வாசகம் அடங்கிய டீ சர்ட் அணிந்து வந்த பப்பு யாதவ் எம்.பி.

Published On 2024-06-25 15:17 GMT   |   Update On 2024-06-25 15:20 GMT
  • மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • எம்.பி.யாக தேர்வானவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து வருகிறார்.

புதுடெல்லி:

18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News