ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு கனிமொழி உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
- துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார்.
- தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீநகரில் வைத்து நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.
மேலும் துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார். என்சிபி அமைச்சரவையில் இப்போதைக்குப் பங்குகொள்ளப்போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் பவார் தேசியவாத கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, திமுக சார்பில் எம்.பி.கனிமொழி என பிற மாநில கூட்டணி கட்சயினரும் கலந்துகொண்டனர். அமைத்துள்ள என்சிபி ஆட்சிக்கு உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து இவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.