இந்தியா
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்- உலக வங்கி கணிப்பு
- அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும்.
- கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.
புதுடெல்லி:
உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள்'' என்று கூறியுள்ளது.
அதே சமயத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.