இந்தியா

உலகின் 'வாய் புற்றுநோய்' தலைநகரமாக இந்தியா மாறியுள்ளது - டாக்டர் அனில் கோலி எச்சரிக்கை

Published On 2024-08-28 11:53 GMT   |   Update On 2024-08-28 11:53 GMT
  • புகையிலை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.
  • வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.

இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் பலருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.

வாய் புற்றுநோய் குறித்து மருத்துவர் அனில் கோலி யூடியூபர் ராஜ் சாமானிக்கு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த நேர்காணலில் பேசிய அவர், "மொத்த புற்றுநோய்களில் 30% வாய் புற்றுநோய் தான். உலகின் வாய் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா மாறியுள்ளது. புகையிலை மற்றும் மதுவை அதிக அளவில் எடுத்து கொள்வது, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Full View


Tags:    

Similar News