இந்தியா
இந்தியாவில் விதிமுறைகள் மீறியதாக 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்
- இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக டிசம்பரில் 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டது.
- கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது.
புதுடெல்லி:
வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில் 13,89,000 வாடஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பு இன்றி முடக்கி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
ஏற்கனவே, கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது நினைவிருக்கலாம்.