இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் உருவாகும் அதிநவீன டிரோன்

Published On 2024-08-13 15:30 GMT   |   Update On 2024-08-13 15:31 GMT
  • அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது.
  • மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது.

நவீன காலத்தில் வீரர்கள் நேருக்குநேர் மோதிக்கொள்வது குறைந்து வருகிறது. உக்ரைன்-ரஷியா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆளில்லா விமானமான இதை மிக நீண்ட தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம். எதிரியின் ஒரு இடத்தை இலக்காக வைத்து வெடிப்பொருட்களுடன் டிரோன் அந்த இடத்தை தாக்கும். எதிரி நாடுகள் சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தி விடலாம். உக்ரைன்- ரஷியா சண்டையில் இதுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியா உள்நாட்டு என்ஜின் உடன் வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த நாசக்கார டிரோனை தயாரிக்க உள்ளது. இந்த டிரோனின் வடிவத்தை தேசிய விண்வெளி ஆய்வுக்கூடம் வெளியிட்டுள்ளது. 78-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இது இந்திய பாதுகாப்பின் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்றால் மிகையாகாது.

இது 2.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது. 25 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

இந்த டிரோனால் 9 மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வட்டமடித்து, இலக்கு எது என்பதை கண்டறிந்தபின், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த இடத்தில் டிரோன் மோதவிட்டு வெடிக்கச் செய்யலாம்.

Tags:    

Similar News