இந்தியா

மதக் கலவரங்களை தூண்ட ஆர்எஸ்எஸ் பெருச்சாளிகளை போல் ஊடுருவல்- ஹேமந்த் சோரன் எச்சரிக்கை

Published On 2024-09-25 20:20 GMT   |   Update On 2024-09-25 20:20 GMT
  • ஊருக்குள் புகுந்து மக்களை பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்
  • கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மும்முரம் காட்டி வரும் வேலையில் பாஜக தேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு விசிட் அடிக்கத் தொடங்கியுள்ளனர். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த சம்பாய் சோரன் சமீபத்தில் பாஜக பக்கம் சாய்ந்தது ஜேஎம்எம் கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நடக்க உள்ள பிரச்சாரமே வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படும். எனவே எதிரணிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்துது டிஜிட்டல் திரை மூலம் பேரணியில் பேசிய ஹேமந்த் சோரன், பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஜார்கண்டில் பிரச்சாரம் செய்து வருவதை சுட்டிக்காட்டி பாஜக அங்குள்ள இந்து முஸ்லீம் சமூகங்களிடையே சண்டை மூட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்கும் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஹந்தியா[handia] தாறு [daru] [உள்ளூர் மது வகைகள் ] உடன் ஊருக்குள் புகுந்து மக்களை மயக்கி பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் அம்மாநிலத்தில் பல பகுதிகளில் கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட  சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். வியாபாரிகளும் தொழிலதிபர்களும் நடத்தும் பாஜக கட்சி தனது பண பாலத்தின் மூலம் அரசியல் தலைவர்களையும் விலைக்கு வாங்குகிறது என்று சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதையும் மறைமுகமாக சாடியுள்ளார்.

Tags:    

Similar News