சிஏஏ-ன் கீழ் விண்ணப்பிக்க செயலி அறிமுகம்
- நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
- மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்டது.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
அதன்படி, நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சிஏஏ வகை செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்ட நிலையில்,
'CAA-2019' என்கிற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.