இந்தியா
உத்தரபிரதேசத்தில் வருமான வரி சோதனை: வியாபாரிகள் வீடுகளில் ரூ.40 கோடி சிக்கியது
- ஆக்ரா, லக்னோ, கான்பூரில் வியாபாரிகளின் வீடுகள் உள்பட 6 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- இன்னும் பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த செருப்பு வியாபாரிகள் 3 பேர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆக்ரா, லக்னோ, கான்பூரில் வியாபாரிகளின் வீடுகள் உள்பட 6 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
நோட்டுகளை எண்ண வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை ரூ.40 கோடி பணம் இருப்பது தெரியவந்தது. இன்னும் பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.