இந்தியா

பப்ஸ் சாப்பிட வந்தது ஒரு குத்தமா.. உணவகத்தின் சிக்கன் பப்ஸ்களில் ஊர்ந்த எலி - வைரல் வீடியோ

Published On 2024-07-07 15:57 GMT   |   Update On 2024-07-07 15:57 GMT
  • கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது
  • இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது

ஐஸ்கிரீமில் மனித விரல், குளோப்ஜாமுனில் கரப்பான் பூச்சி, மெஸ் உணவில் பாம்பு என சமீப காலங்களாக இந்தியாவில் ஹோட்டல்கள், ரயில்வே உணவுகளின் தரம் கீழிறங்கிக்கொண்டே வருவதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான்  மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணிக்கும்போது மக்கள் பெருமபாலும் ஐஆர்சிடிசி தயாரிக்கும் உணவையும், ரயில் நிலையங்களின் உள்ளே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பப்ஸ் இந்தியர்களின் நொறுக்குத் தீனி உணவுகளில் முன்னிலையில் உள்ளது. அந்த பப்சுக்கே இப்போது வந்துள்ள சோதனையை யாரிடம் சொல்வது என இணயவாசிகள் நொந்துகொள்கின்றனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை படப்பிடித்து ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது.

 

Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ? byu/Aggressive_Basil923 inkolkata
Tags:    

Similar News