இந்தியா
ஜாமீன் வழங்க கோரி ஆம் ஆத்மி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
- மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் மறுத்தது.
- ஜாமின் வழங்க மறுத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.