இந்தியா (National)

முஸ்லிம் போல வேடமிட்ட 'ஜெயின்கள்': 124 ஆடுகளை 'பக்ரீத்' பிரியாணியிலிருந்து காப்பாற்றிய வினோதம்

Published On 2024-06-18 11:57 GMT   |   Update On 2024-06-18 11:57 GMT
  • பக்ரீத் அன்று ஆடுகள் விற்பனை களைகட்டும்.
  • பக்ரீத் அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மட்டுமில்லாமல் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் ஆட்டை வெட்டி பிரியாணி செய்து அனைவருக்கும் பகிர்ந்து அழிப்பார். அதனால் ஆடுகள் விற்பனை அப்போது களைகட்டும்.

டெல்லியில் நடைபெற்ற ஆடுகள் விற்பனையில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகை அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற முடிவு செய்தனர். அவர்களால் எல்லா ஆடுகளையும் காப்பாற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் முடிந்த அளவு ஆடுகளை காப்பாற்றலாம் என்று முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

கிட்டத்தட்ட 15 லட்சம் நிதி திரட்டியவர்கள், முஸ்லிம் போல வேடமிட்டு 124 ஆடுகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் மூலம் 124 ஆடுகளின் உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்று ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

தற்போது வாங்கிய 124 ஆடுகளை என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் முழித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தினரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும், பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News