இந்திய ஒற்றுமை யாத்திரை - காஷ்மீரில் நடந்து செல்லும் தூரம் குறைப்பு
- காஷ்மீரில் பாதயாத்திரையின் நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றது காங்கிரஸ்.
சிம்லா:
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
காஷ்மீரில் மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் சில இடங்களில் வாகனங்கள் மூலமாகவும், வேறு சில இடங்களில் நடைபயணமாகவும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் ஏற்கனவே கூறியுள்ளார்
இந்நிலையில், பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி காஷ்மீரில் பாதயாத்திரை செல்வது உறுதி. அதே சமயத்தில், பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பாதுகாப்பு தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.