இந்தியா

தோல்வியை ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர்: சிறையிலிருந்தே வென்ற சுயேச்சை வேட்பாளர்

Published On 2024-06-04 09:56 GMT   |   Update On 2024-06-04 09:56 GMT
  • உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
  • அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்பதாக முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

வெற்றி பெற போகும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News