என் பெயர் 'ஜெயா அமிதாப் பச்சன்' இல்லை - மாநிலங்களவையில் கொந்தளித்த ஜெயா பச்சன்
- என் பெயரை “ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.
- கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
மாநிலங்களவையில் எம்.பி. ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது 'ஜெயா அமிதாப் பச்சன்' என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டார்.
இதனை கேட்டதும் கடுப்பான ஜெயா பச்சன், என் பெயரை "ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது. கணவனின் பெயரை தவிர பெண்களுக்கு எந்தவொரு சுயமான சாதனையும் இல்லாதது போல பார்க்கின்றனர்" என அதிருப்தி தெரிவித்தார்.
இதனையடுத்து உங்களது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக உள்ள பெயரையே குறிப்பிட்டதாக ஹரிவன்ஷ் விளக்கம் அளித்தார்.
பின்னர் மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன், டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையான சம்பவம், இந்த விஷயத்தில் நாம் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று தெரிவித்தார்.