இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல்: முதல்வர் ஹேமந்த் சோரன் - மனைவி கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்

Published On 2024-10-24 16:11 GMT   |   Update On 2024-10-24 16:11 GMT
  • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.
  • மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.

முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த முக்கிய தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்து சீட் கொடுத்துள்ளது பாஜக. ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதேசமயம் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இவர்களை உள்ளடக்கிய 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News