இன்ஸ்டா ரீல்ஸ்காக விபரீதம்- 100 அடி ஆழ ஏரியில் குதித்த வாலிபர் உயிரிழப்பு
- நீரின் அடியில் ஆழத்திற்கு சென்ற வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
- விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் படம் எடுப்பதற்காக 100 அடி ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் தௌசிப் (18) என்கிற வாலிபர் இன்ஸ்டாகிராம் ரீல்லுக்கு படம் எடுப்பதற்காக 100 அடி உயரத்தில் இருந்து மிகவும் ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்துள்ளார்.
குதித்து நீந்த முயன்ற வாலிபர் நீரில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
அங்கு, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லை.
இதையடுத்து, இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தௌசிக்கின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது. அதில், தௌசிக் தண்ணீரில் குதிப்பதையும், அவரது நண்பர் அதனை தைரியமாக வீடியோ பதிவு செய்துள்ளதையும் காட்டுகிறது.