இந்தியா

டெல்லி மந்திரி பதவியில் இருந்து கைலாஷ் கெலாட் விலகல்.. ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Published On 2024-11-17 09:25 GMT   |   Update On 2024-11-17 09:25 GMT
  • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
  • ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை

தலைநகர் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலகியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கைலாஷ் கெலாட் கவனித்து வந்தார். அடுத்த வருட தொடக்கத்தில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆம் ஆத்மி - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில் கட்சியில் நீண்ட காலமாக இருந்த மூத்த தலைவர் அசோக் கெலாட் ராஜினாமா ஆம் ஆத் மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அசோக் கெலாட் எழுதியுள்ள கடித்ததில், ஆம் ஆத்மி மிக மோசமான உட்கட்சி சவால்களில் சிக்கி உள்ளது. கட்சி முன்வைத்த பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

யமுனை ஆற்றை தூய்மைப் படுத்துவேன் என்ற வாக்குறுதியே அதற்கு சாட்சி. இனியும் ஆம் ஆத்மியை நம்பலாமா? என்ற என்று மக்கள் யோசிக்கின்றனர்.பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் போட்டிப் போட்டுக் கொண்டே இருந்தால் டெல்லி உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது.

நான் எனது அரசியல் பயணத்தை மக்கள் சேவை என்ற இலக்கோடு தொடங்கினேன். அதையே தொடர விரும்புகிறேன். அதனால் இப்போது ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தெரிவித்துள்ளார். கைலாஷ் கெலாட் தற்போது பாஜகவில் சேருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News