இந்தியா

ரத்தம் செலுத்தப்பட்ட சிறார்களுக்கு எச்ஐவி: உ.பி.யில் அதிர்ச்சி

Published On 2023-10-25 07:19 GMT   |   Update On 2023-10-25 08:12 GMT
  • அரசு மருத்துவமனையில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
  • 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில், தலாசீமியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

 

விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,

ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News