இந்தியா

சீனா விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்

Published On 2024-06-06 08:51 GMT   |   Update On 2024-06-06 08:51 GMT
  • இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.
  • சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்டு.

புதுடெல்லி:

கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்ய ஏற்கனவே கோர்ட் தடை விதித்திருந்தது. இதனால் அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

Tags:    

Similar News