இந்தியா

நிறைவு விழா

காசி தமிழ் சங்கமம் நிறைவு - கலாசார பெருமையை மீட்டெடுக்கும் முயற்சி என அமித்ஷா பெருமிதம்

Published On 2022-12-16 21:41 GMT   |   Update On 2022-12-16 21:41 GMT
  • வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • வாரணாசியில் நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்த நிறைவு விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் . இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், வாரணாசியில் ஒரு மாதமாக நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, நம் நாட்டின் கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகும் நம்

தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழகத்தில் இருந்து வந்த சகோதர, சகோதரிகளுக்கு காசி மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காசியைப் பற்றிய நினைவுகளை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News