காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது- ஃபரூக் அப்துல்லா
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துதார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு ஜம்ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பாகிஸ்தானில் உள்ள தலைமைக்கு நான் கூற விரும்புகிறேன், அவர்கள் உண்மையிலேயே இந்தியாவுடன் நட்புறவை விரும்பினால், அவர்கள் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மேலும் காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது" என்றார்.