இந்தியா

இந்தியர்கள் என்ற உணர்வில் துளியும் குறைய கூடாது- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் குஷ்பு பேட்டி

Published On 2022-12-02 03:08 GMT   |   Update On 2022-12-02 03:08 GMT
  • காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
  • இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

வாரணாசி:

காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News