இந்தியா

கவிதாவின் நீதிமன்ற காவல் 23-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2024-04-15 07:36 GMT   |   Update On 2024-04-15 07:36 GMT
  • கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.
  • இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகரராவின் மகளான கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரது 3 நாள் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கவிதாவை இன்று கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தியது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் கவிதா கூறும்போது, "இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி. பா.ஜனதா வெளியில் என்று போகிறதோ? அதை சி.பி.ஐ. உள்ளே கேட்கிறது. 2 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் கேட்கிறது புதிது இல்லை" என்றார்.

Tags:    

Similar News